Tamilnadu
“தாறுமாறாக ஓடிய கார்.. துணை ஆட்சியர் பரிதாப பலி”: விபத்துக்கான உண்மை காரணம் என்ன? - போலிஸ் தீவிர விசாரணை!
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்துணை ஆட்சியராக இருப்பவர் ராஜாமணி. இவர் இன்று சங்கராபுரம் அருகே ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கள்ளக்குறிச்சி சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் எதிரே இருந்த 3 பைக்குளில் மோதியது.
மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடிச்சென்று கார் மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து கார் மீது விழுந்ததால் துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் காரில் சென்ற ஓட்டுனர் உட்பட மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் அந்த மின் கம்பத்தின் அருகே நின்றிருந்த ஒரு குழந்தை உட்பட 2 பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு விபத்தில் அடிபட்ட 5 பேரின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 11 வயது கோபிகா என்ற சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் உயிரிழந்தது.
இதுகுறித்து சங்கராபுரம் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்கான காரணம் என்ன? விபத்து எப்படி ஏற்பட்டது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை எப்படி இறந்தது என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துணை ஆட்சியர் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சங்கராபுரம் அருகே சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி துணை ஆட்சியர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!