Tamilnadu
“ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு” : அமைச்சர்கள் அதிரடி அறிவிப்பு!
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்க நேரில் சென்று வலியுத்தியுள்ளனர்கள்.
முன்னதாக இந்த நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, முதல்முறையாக அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அனுப்பிய மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக அரசிக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
பின்னர், 142 நாட்களுக்கு பிறகு, மீண்டும் ஒப்புதல் கொடுக்கப்படாமல் மசோதா திருப்பி அனுப்பட்டது. மற்றொரு முறை நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக மீண்டும் நீட்விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அப்போது, நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு காலம் தாழ்த்தாமல் அனுப்பிவைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக கொண்டு இந்த சந்திப்பினை நிகழ்த்தினர்.
பின்னர் அமைச்சர்கள் தென்னரசு மற்றும் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை 142 நாட்களாகியும் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பவில்லை. மேலும், பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு, நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர்.
அதன்பிறகு, முதலமைச்சரின் முனைப்பால் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது, பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை இனியும் தாமதம் செய்யாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
நீட் விலக்கு மசோதா மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆளுநர் எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை. அதேநேரத்தில், நீட் விலக்கு மசோதா மீது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும், பேரவையின் மாண்பையும் ஆளுநர் உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்படுவதால் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு.
மேலும் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழா மற்றும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்கமாட்டார். மக்களாட்சி மாண்பின் அடையாளமான சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் அலட்சியப்படுத்துவதை ஏற்க முடியாது.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக முதலமைச்சரிடம் அளித்த உறுதிமொழியை ஆளுநர் நிறைவேற்றவில்லை. 208 நாட்கள் கடந்தும் நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். நீட் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவதற்கு ஆளுநர் எவ்வித ஒப்புதலும் அளிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!