Tamilnadu
“செல்போன் தர மறுத்ததால் 6ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை” : ‘கேம்’ மோகத்தால் நடந்த சோகம்!
உலகம் முழுவதுமே பெரும்பாலானோர் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கிவிடுகின்றனர். மக்கள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முன்னதாக வந்த ப்ளூவேல் வீடியோ கேம் போன்று தற்போது இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது ‘பப்ஜி’ மோகம்.
இவை வெறும் விளையாட்டுகளாக மட்டும் இல்லாமல் பல்வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்திவிடுகின்றன. சில சமயங்களில் உயிரையும் காவு வாங்கும் அளவுக்கு அபாயகரமானதாக உள்ளதாக ‘பப்ஜி’ விளையாட்டை தடை செய்யவேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே செல்போன் தர மறுத்ததால் 6ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கிடவு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி - கிட்டாண் அம்மாள் தம்பதி. இந்த தம்பதிக்கு 3 மகள்களும், அர்ஜூன், ஈஸ்வரன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பழனிச்சாமியின் கடைசி மகன் அர்ஜூன் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.
இதனால் பெற்றோர் அர்ஜூனை திட்டு படிப்பில் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அர்ஜூன் தொடர்ந்து கேம் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டி வந்த நிலையில், நேற்றைய தினம் தந்தையிடம் மேம் விளையாட செல்போன் கேட்டுள்ளார்.
ஆனால் தந்தை தரமறுத்து திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் வீட்டின் அறைக்குச் சென்ற நிலையில், நீண்ட நேர ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குவந்த போலிஸார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !