Tamilnadu
”உள்ள வந்தாச்சு.. இப்ப எதயாச்சும் எடுக்கனுமே..” - விபூதியை பூசிக்கொண்டு முட்டையை ஆட்டையப்போட்ட முதியவர்!
நீண்ட நாட்களாக ஹோட்டலை நோட்டமிட்டு முதியவர் ஒருவர் முட்டை மற்றும் உண்டியலை திருடிச் சென்ற நிகழ்வு சிவகங்கையில் நடந்திருக்கிறது.
காரைக்குடியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வருகிறது பாலமுருகன் என்பவரது உணவகம். அங்கு காலை 4 மணிக்கே சென்று உணவக ஷட்டரை திறந்து சமைப்பவர்கள் வந்து சமைப்பதற்காக சமையல் அறையையும் திறந்து வைத்துவிட்டு மீண்டும் ஷட்டரை வெறுமனே மூடிவிட்டு நடைபயிற்சிக்கு செல்வது பாலமுருகனின் வழக்கம்.
இதனை முதியவர் ஒருவர் வெகுநாட்களாக நோட்டமிட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் 7ம் தேதி அதிகாலை ஹோட்டலுக்குள் நுழைந்த அந்த முதியவர் அங்கிருந்த விபூதியை பூசிக்கொண்டு ஏதாவது சிக்குமா என சுற்றி பார்த்திருக்கிறார்.
அப்போது முட்டைகள், மேஜையில் இருந்த தொண்டு நிறுவன உண்டியல், ஆகியவற்றை அந்த முதியவர் சுருட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். பின்னர் பணியாளர்கள் வந்துபோது ஹோட்டல் ஷட்டர் திறந்தே கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உரிமையாளர் பாலமுருகனுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து பார்த்த போது மேற்குறிப்பிட்ட சம்பவம் பதிவாகி இருந்திருக்கிறது. இதனையடுத்து சிசிடிவி ஆதாரத்துடன் காரைக்குடி வடக்கு போலிஸாரிடம் புகாரளித்ததன் அடிப்படையில் முதியவரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்கம் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!