Tamilnadu
முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை - புதுச்சேரியில் நடந்த கொடூரம் : போலிஸ் தீவிர விசாரணை!
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ஆரியபாளையம் பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக வில்லியனூர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலிலிஸார், 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரை மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெதெரியவந்தது. இதனை அடுத்து அவரது உடலை மீட்ட போலிசார், புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து இறந்த முதியவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!