Tamilnadu

“மகளை பார்க்கவந்த தாய்க்கு நேர்ந்த சோகம்.. கதிகலங்கிய சென்னை விமான நிலையம்” : போலிஸ் தீவிர விசாரணை!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் உக்கி தேவி (84). இவருடைய மகன் மாங்கிலால் சென்னையில் வசிக்கிறார். உக்கிதேவி கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானிலிருந்து சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு வந்திருந்தாா்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் உக்கிதேவி, அகமதாபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் போா்டிங் பாஸ் வாங்கிவிட்டு, பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காக தயாராகி அமர்ந்து இருந்தாா்.

அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தாா். அதோடு மயங்கி விழுந்தார். இதையடுத்து சக பயணிகள், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரை பரிசோதித்தனா். அவா் மயங்கியநிலையில் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உக்கிதேவி கடுமையான மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.

இதையடுத்து சென்னை விமான நிலைய போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதோடு உக்கிதேவியின் மகன் மாங்கிலாலுக்கும் தகவல் கொடுத்தனா். விமானநிலைய போலிஸார் உக்கிதேவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Also Read: ரயில் பயணத்தின் போது தகராறு.. ஒருவர் சுட்டுக்கொலை - CRPF வீரருக்கு 7 ஆண்டுகள் சிறை - நடந்தது என்ன?