Tamilnadu

வெளிநாட்டு பறவைகளின் தாய்மடி.. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் நிகழும் அதிசயம் : சிறப்புத் தொகுப்பு!

நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளது. நீர் நிலைகள் அனைத்தும் இந்த ஆண்டு நிரம்பி உள்ளதால் தேவையான உணவு, கிடைப்பதால் கடந்த ஆண்டுகளை விட கூடுதல் பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து வருகிறது.

இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு :-

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது கூந்தன்குளம் கிராமம். நெல்லையில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து செல்கிறது. இந்த கூந்தன்குளம் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

129.3 3 ஏக்கர் நிலப்பரப்பில் கூந்தன்குளம், காடன் குளம் கன்னங்குளம், சிலையம் ஆகிய பகுதி குளங்களை இணைத்து கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சீசன் காலம் என்பது ஆங்கில மாத்திற்கு ஜனவரி மாதம் பறவைகள் வரவு தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை தங்கி இருந்து தனது குஞ்சுகளுடன் தங்களது நாடுகளுக்கு பறந்து செல்கிறது.

கூந்தன்குளத்திற்கு ஆண்டு தோறும் சைபீரியா, ஆஸ்திரேலியா ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, மியான்மர் இலங்கை பாகிஸ்தான் என ஏராளமான வெளிநாடுகளிலிருந்து பறவைகள் வந்து செல்கின்றன ஜனவரி மாதம் வரும் பறவைகள், குளத்தில் மட்டும் அல்லாது கூந்தன்குளம் ஊர் பகுதியில் உள்ள வீடுகள், கருவேலமரங்கள், வேப்ப மரம் ஆகியவற்றிலும் கூடுகள் கட்டி அப்பகுதி மக்களிடம் நெருக்கமாக இருந்து வருகிறது.

குளத்தில் கிடைக்கும் மீன்கள் மட்டும் அல்லாது அருகில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று கடல் பகுதிகளில் இருந்து மீன்களை இரையாக பிடித்து வந்து குஞ்சுகளுக்கு கொடுக்கிறது. 8 மாதங்கள் வரை தங்கி இருந்து முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து குஞ்சுகள் பறக்கத் தொடங்கியதும் ஆகஸ்ட்மாதம் தாய் பறவைகள் குஞ்சுகுளை அழைத்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு பயணமாகிறது.

சைபீரியா நாட்டில் இருந்து பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்த., தட்டை வாயன், செண்டு வாத்து முக்குளிப்பான் போன்ற நாரை வகைகளும் ரஷ்யா ஆஸ்திரேலியா ஜெர்மனி பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வெள்ளை அரிவாள் மூக்கன், டால் மிஷன், பெலிக்கன் பறவைகள் பாம்பு தாரா செங்கால் நாரை மூக்கு நாரை கரண்டிவாயன் என இந்த ஆண்டு 327 வகையான பறவைகள் வந்துள்ளது.

மேலும் 4000 ஆயிரம் கூடுகள் வரை கட்டியுள்ளதாகவும் ஒரு லட்சம் பறவைகள் முகாமிட்டுள்ளதாக வனத்துறை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, மணிமுத்தாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீர், கூந்தன் குளத்தில் உள்ள குளங்களில் உள்ள மீன்கள் ஆகியவை பறவைகள் வர காரணமாக அமைகின்றது

இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதங்களில் பறவைகள் இங்கு வந்து கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து குஞ்சுகள் வளர்ந்தவுடன் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்லும். எங்கள் மக்கள் வனத்துறையுடன் இணைந்து இந்த பறவைகளுக்கு முழு பாதுகாப்பு அளித்து வருகிறோம். மேலும் தீபாவளி, கோவில் திருவிழாக்கள் ஆகிய காலங்களில் கூட பட்டாசு வெடிப்பது, மேளம் வாசிப்பது என அனைத்தையும் நிறுத்திவிட்டோம்.

கூடுகளில் இருந்து தவறி பறவைகளை அருகில் உள்ள வன அலுவலகத்தில் ஒப்படைத்து அதை காப்பாற்றும் முயற்சியில் நாங்கள் ஈடுபடுவோம். அந்த அளவிற்கு பறவைகள் மேல் அன்பு காட்டிவருகிறறோம். பறவைகள் வரவால் எங்கள் பகுதியில் விவசாயம் செழித்து வளர்கிறது. இந்த ஆண்டு நல்ல மழையின் காரணமாக நீர் நிலைகள் நிறைந்து உள்ளதாக கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் .

Also Read: “பூமியை தாக்கும் சூரிய புயல் - இன்டர்நெட்.. GPS சேவைகள் பாதிக்க வாய்ப்பு” : NASA விஞ்ஞானி சொல்வது என்ன?