Tamilnadu

’வீட்ல யாருங்க..’ - ஊட்டி டூ குன்னூர் : வாட்டி வதைக்கும் வெயிலால் உணவு தேடி அலையும் யானைகள் கூட்டம்!

சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வனத்தில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் கூட்டம் இடம் பெயர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி மேட்டுப்பாளையம் கல்லாறு வனப்பகுதியில் இருந்து குன்னூர் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட கரோலினா எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை கூட்டம் கள்ளர் வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் குன்னூர் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்து உள்ளன.

இவை கடந்த ஒரு வார காலமாக ரன்னிமேடு, காட்டேரி, கிளண்டேல் போன்ற பகுதிகளில் முகாமிட்டுள்ளன.மேலும் குடியிருப்பு பகுதி அருகே யானைகள் நிற்பதால் பொதுமக்களும், தொழிலாளர்களும் அச்சத்துடன் உள்ளனர்.

தொடர்ந்து இரவு பகல் பாராமல் தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் புதர் சூழ்ந்த பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை கூட்டம் மீண்டும் புதர் சூழ்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: தேயிலை தோட்டத்தில் பறந்து வந்து விழுந்த கார்.. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்.. என்ன நடந்தது தெரியுமா?