Tamilnadu

யூடியூபர் TTF வாசனை கைது செய்த சென்னை போலிஸ்: நடந்தது என்ன?

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் TTF வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு 20 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மேலும் இவருக்கு இந்த வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து கோவையில் இருந்து நேபாளத்திற்கு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வீடியோ ஒன்றை அன்மையில் வெளியிட்டிருந்தார். மேலும், இந்த பயணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கச் சென்னைக்கு வருவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னை வந்த வாசனை காண அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரது நெரிசல் ஏற்பட்டது.

மேலும் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் வெடிவைத்துக் கொண்டாடியுள்ளனர். இது சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது. இதையடுத்து அங்கு வந்த போலிஸார் TTF வாசனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றர். பிறகு அவரை போலிஸார் விடுதலை செய்துள்ளனர். TTF வாசனை கைது செய்தது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பேருந்தில் தவறாக நடந்து கொண்ட நபருக்கு பாடம் புகட்டிய பெண் வழக்கறிஞர்.. இரவிலும் அதிரடி காட்டிய போலிஸ்!