Tamilnadu
மதுபோதையில் தவறாக நடக்க முயன்ற நபரை வெளுத்து எடுத்த நெல்லை பெண் - குவியும் பாராட்டு!
நெல்லை மாவட்டம் தியாகராஜ நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவர் நேற்று நெல்லை பேருந்து நிலையத்தில் நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவரிடம் மணிகண்டன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தப்பெண் மணிகண்டனை கடுமையாக தாக்கி திட்டியுள்ளார். உடனே சக பயணிகளும் மணிகண்டனை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். இதற்கிடையில் தகவல் அறிந்து மேலப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இருப்பினும் ஆத்திரத்தில் தாங்க முடியாத அந்த பெண் போலிஸார் கண்முன்னேயே மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
பின்னர் போலிஸார் மணிகண்டனை அங்கிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். தற்போது மணிகண்டன் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மணிகண்டன் அதிக மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
பொது இடத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டலை தனி ஆளாக எதிர் கொண்ட பெண்ணின் இச்செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!