Tamilnadu
“பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - கணக்கு ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைப்பு” : போலிஸ் எடுத்த அதிரடி!
கள்ளக்குறிச்சி அருகே வானவரெட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் 1 வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை செய்து வருபவர் துளசிராமன் இவர் உதவி தலைமை ஆசிரியர் ஆவார்.
இந்தநிலையில், துளசிராமன் கடந்த 3 மாதங்களாக பள்ளியில் 5 வகுப்பு படிக்கும் 15 சிறுமிகளை பாலியல் சீண்டல், செய்து வந்துள்ளார். இதனால் சிறுமிகள் கடுமையாக இன்னல்களை சந்தித்து வந்துள்ளனர். இதனை மாணவிகள் பெற்றோர்களிடம் அவ்வப்போது தெரிவித்தும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரே நாளில் 15 சிறுமிகளை ஆசிரியர் துளசிராமன் பாலியல் சீண்டல் தூண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஒன்றுகூடி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலிஸார் வானவரெட்டி அரசு தொடக்கப் பள்ளிக்குச் ஆசிரியர் துளசிராமனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை கைது செய்து உள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !