Tamilnadu

‘முதல்வன்’ பட பாணியில்.. ஒருநாள் தலைமை ஆசிரியரான பள்ளி மாணவி : ஆச்சரிய காரணம்!

சிவகங்கை மாவட்டம், சியோன் நகரைச் சேர்ந்தவர் கார்மேகக்கண்ணன். இவரது மகள் தீப பிரபா. இவர் மானாமதுரை பர்மா காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று வழக்கம்போல் பள்ளியில் உள்ள தனது வகுப்பறைக்குச் சென்றுள்ளார். அப்போது கீழே தரையில் 50 ரூபாய் பணம் கிடந்துள்ளது. இதை எடுத்து தனது வகுப்பு ஆசிரியர் ராமலட்சுமியிடம் கொடுத்துள்ளார். அப்போதுதான் ஆசிரியருக்கே முன்தினம் தான் தவறிவிட்ட பணம் எனத் தெரியவந்துள்ளது.

உடனே மாணவியின் நேர்மையை பாராட்டி அவர் மாணவியை வகுப்பு வகுப்பாக அழைத்துச் சென்று அவரது நேர்மையை எடுத்துக் கூறி சக மாணவர்களின் கைதட்டலை ஊக்கப் பரிசாகப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

பின்னர் ஆசிரியர் இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஞானசேகரிடம் கூறியுள்ளார். இதையடுத்து மாணவிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியர் பணியைக் கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளார் தலைமை ஆசிரியர். மேலும் தலைமை ஆசிரியர் பணி என்ன என்பது குறித்து மாணவிக்கு எடுத்துக் கூறியுள்ளார். இந்த ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியர் பணியால் அந்த மாணவி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

Also Read: தற்கொலைக்கு முயன்ற தாயின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய சிறுவன்.. நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?