Tamilnadu

“நேற்று வேலூர்; இன்று மணப்பாறை.. அடுத்தடுத்து பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்” : என்ன காரணம் ?

வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக்காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணமாக பெட்ரோல், டீசலின் விலையேற்றத்தை குறிப்பிடுகின்றனர்.

மக்களின் தேவையை உணர்ந்த நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கின. பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வரும் நிலையில், அந்தவாகனங்களில்பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் கூட, வேலூரில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நிறுத்தி வைக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள படுகைக்களம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் வயது 27. இவர் நேற்று இரவு சிங்கப்பூர் செல்வதற்காக தனது எலக்ட்ரிக் பைக்கில் மணப்பாறைக்கு வந்த இவர் ஆஞ்சநேயர் பகுதியில் உள்ள தனது நண்பர் பாலு என்பவரது கடையில் பைக்கை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.

இன்று காலை பாலு கடையினுள் இருந்து எலக்ட்ரிக் பைக்கை எடுத்து வெளியே வைத்த போது பைக்கின் பேட்டரி பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. பின்னர் தண்ணீரை உற்றி அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் சிறிது நேரத்தில் அதிகளவில் புகைவெளியேறியது பேட்டரி பகுதிகள்  முற்றிலும் சேதமடைந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்துக்கு ஏற்பட காரணம் என்ன?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடிக்க அதில் உள்ள பேட்டரி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது, லித்தியம் அயன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பேட்டரி அனைத்தும் சேதாரமோ அல்லது மின் கசிவு போன்ற காரணங்களால் தீப்பிடிக்கின்றன. ஒரு முறை தீ பிடித்துவிட்டால் இந்த லித்தியம் அயன் பேட்டரி அணைப்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது.

மேலும் தண்ணீர் மூலம் தீயை அணைத்தால் பேட்டரி ஹைட்ரஜன் கேஸ் மற்றும் லித்தியம் ஹைட்ட்ராக்ஸைட் வாயு வெளியிடும். இந்த கேஸ் பெரும் தீப்பிடிக்கும் அபாயம் உள்ள கேஸ் எனக் சொல்லப்படுகிறது.

Also Read: “ஆசை ஆசையாய் வாங்கிய எலக்ட்ரிக் பைக் - சார்ஜ் செய்யும்போது நடந்த விபரீதம்”: தீயில் கருகி தந்தை, மகள் பலி!