Tamilnadu
“ஆற்றில் வீசி பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த கொடூரம்”: மூட நம்பிக்கையால் நடந்த விபரீதம் - பகீர் சம்பவம்!
திண்டுக்கல் மாவட்டம், ராசாபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மனைவி லதா. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு இரண்டாவதாக மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி பார்த்தபோது இரண்டாவது குழந்தை ராகுலைக் காணவில்லை என தாய் லதா கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் குழந்தையை அக்கம் பக்கம் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பாலாற்று அருகே உள்ள புதர்ச்செடியில் குழந்தை ராகுல் சடலமாக இருப்பதாக ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அங்கு சென்றுபார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்தபோலிஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்ததுள்ளது. இரண்டாவது குழந்தை பிறந்து முதலே தாய் லதா மன கஷ்டத்துடன் இருந்துவந்துள்ளார்.
மேலும் குழந்தையின் ஜாதகத்தில் நேரம் சரியில்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்ததாக லதா போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!