Tamilnadu

“உங்களுக்கு இங்க என்ன வேலை?” : RSS இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விரட்டியடித்த கடலூர் மக்கள் - பின்னணி என்ன?

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 20க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சீருடை அணிந்தபடி சிலம்பம் மற்றும் மதம் சார்ந்த கருத்துகள் குறித்து பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர்.

அப்போது, வடலூர் சத்திய ஞானசபையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் இதனைக் கண்டு அவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாகவும், மிரட்டும் வகையிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பேசியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வள்ளலார் சாதி மதங்களை கடந்தவர், அவரைப் பின்பற்றி வழிபாடு செய்யும் சத்திய ஞானசபையில் மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தக்கூடாது எனவே பயிற்சியை நிறுத்திவிட்டு இங்கிருந்து கிளம்பும்படி பொதுமக்கள் எச்சரித்தனர்.

இதனிடையே தகவல் அறிந்து வந்த வடலூர் காவல்துறையினர் பயிற்சியில் ஈடுபட்டவர்களை களைந்து போகும்படி உத்தரவிட்டனர். இதனையடுத்து பயிற்சியில் இருந்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறினர்.

Also Read: மீண்டும் விறகு அடுப்பு.. மக்களின் தலையில் இடியாக இறங்கும் பெட்ரோல், டீசல் விலை: மோடி அரசை சாடும் பெண்கள்!