Tamilnadu
16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு!
அரியலூர் மாவட்டம் பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பு ராஜ். ஜேசிபி ஆபரேட்டரான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் பக்கத்து ஊருக்கு ஜேபிசி வேலை செய்யச் சென்றுள்ளார்.
அப்போது அந்த ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் இரும்புலிகுறிச்சி போலிஸார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அன்பு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அன்புவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !