Tamilnadu
தொழிலதிபரிடம் ரூ.97 லட்சம் மோசடி.. பாஜக MP சுரேஷ் கோபியின் சகோதரரை அதிரடியாக கைது செய்த தமிழக போலிஸ்!
கோவை மாவட்டம் கவுண்ட பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன். தொழிலதிபரான இவரிடம் மதுக்கரை பகுதியில் 4,52 ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருப்பதாகக் கேரளாவைச் சேர்ந்த சுனில் கோபி கடந்தாண்டு தெரிவித்துள்ளார்.
மேலும் நிலம் பிடித்துப்போக முன்பணமாக ரூ.97 லட்சம் பணத்தைக் கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார். இதனால் கிரிதரன், சுனில்கோபி மற்றும் அவரது நண்பர்கள் சிவதாஸ், ரீன ஆகியோர் வங்கிக் கணக்கிற்கு ரூ.97 லட்சம் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து நிலத்திற்கான சொத்து ஆவணங்களைச் சரிபார்த்தபோது, அதில் வில்லங்கம் இருப்பது தெரியவந்தது. இதனால் கொடுத்த பணத்தை கிரிதன் கேட்டுள்ளார். இதற்கு ஒரு மாதத்தில் கொடுத்து விடுவதாக சுனில் கோபி தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒருமாதம் கழித்தும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. மீண்டும் கேட்டபோது சுனில்கோபி அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கிரிதரன் காவல்நிலையத்தில் சுனில் கோபி உட்பட 3 பேர் மீதும் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் கேரள மாநிலம் கோழிக்கோடு சென்று சுனில் கோபியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிவதாஸ், ரீனா ஆகியோரை தேடிவருகின்றனர். கைதான சுனில்கோபி பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் ஆவார். மேலும் இவர் கேரள பா.ஜ.க எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !