Tamilnadu

"தவறியும் இதைச் செய்துவிடாதீர்கள்” : வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்ட SBI !

தொழில்நுட்பங்கள் பல பெருகியுள்ள நிலையில், பல்வேறு தளங்கள் மூலமாக மோசடியாளர்கள் ஊடுருவி வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களையும், பணத்தையும் திருடி வருகின்றனர்.

அதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கும் வகையில், எஸ்.பி.ஐ எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் வங்கிக் கணக்கு தொடர்பானதாக வரும் இணைப்புகளை (links) க்ளிக் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அக்கவுண்டை புதுப்பிக்க, பாஸ்வேர்டை புதுப்பிக்க, KYC அப்டேட் என்ற பெயரில் உட்பொதிக்கப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் சில நேரங்களில் ஆன்லைன் மோசடிகள் நிகழ வாய்ப்புள்ளது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

அப்படி இந்த சேவைகளை செய்ய வேண்டும் என்றால் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்தில் சென்று முறையாக செய்யுங்கள் என வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் QR குறியீடுகள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. QR குறியீடு யாரிடமிருந்தோ வந்தால் தவறுதலாக ஸ்கேன் செய்ய வேண்டாம் என்றும் குறிப்பிடுகிறது. அவ்வாறு செய்தால் உங்கள் கணக்கில் இருந்து பணம் இழக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Also Read: உக்ரைன் - ரஷ்யா போர் : “இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்” - ‘SBI’ அதிர்ச்சி தகவல்!