Tamilnadu
“சிறுமியிடம் அத்துமீறிய 103 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை”: நீதிமன்றம் அதிரடி!
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீலை 9 ந் தேதி அவரது வீட்டில் வாடகை வசித்து வந்த 5 ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமியை சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று சிறுமியிடம் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பிறகு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பெற்றோருக்கு விவரம் தெரிந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இது தொடர்பாக ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மீது புகார் அளித்திருந்த நிலையில், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்திருந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி, அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 45 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமி குடும்பத்திற்கு இழப்பீடாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க கோரி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 103 வயதைக் கடந்த ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டிருப்பது சிறுமிகள் மீதான குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு இத்தீர்ப்பு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!