Tamilnadu
கழக அரசின் இரண்டாவது பட்ஜெட் : இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன்!
தமிழக சட்டப் பேரவை இன்று (18.3.2022) கூடுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் 2022 - 23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று (18.3.2022) தொடங்குகிறது. இன்று (18.3.2022) காலை 10 மணிக்கு 2022 - 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்று சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவிப்பார்.
சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!