Tamilnadu

“உங்கள் ஏரியாவுக்கு வந்தால் சாப்பாடு போடுவீங்களா?” என வாஞ்சையுடன் கேட்ட முதல்வர்.. சிறுமிகள் குதூகலம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள்- சிறுமிகளுடன் செல்போனில் பேசினார். அப்போது அச்சிறுமிகள் நெகிழ்ந்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், எங்கள் ஊருக்கு தாங்கள் வருகை தர வேண்டும் என்று அன்புடன் அழைப்பு விடுத்த அச்சிறு மிகளிடம் ``வந்தால் சாப்பாடு போடுவீங்களா?’’ என்று முதல்வர் கேட்டதும், சிறுமிகள் குதூகலத்துடன் கறிச் சோற்றுடன் விருந்தே வைக்கிறோம் ஐய்யா, என்று ஆரவாரத்துடன் தெரிவித்தனர்.

ஆவடியைச் சேர்ந்த குறவர் இன மாணவிகள் திவ்யா, பிரியா, தர்ஷணி ஆகியோர் காணொலியில் தங்கள் இடர்களை தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அந்த மூன்று மாணவிகளையும் நேரில் வரவழைத்து குறைகளை கேட்டறிந்தார்.

அவர்களின் கல்விக்குத் தேவையான உதவிசெய்வதாகவும் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆவடியில் உள்ள குறவர் வசிப்பிடப் பகுதிக்கு நேற்று நேரில் சென்று அவர்களின் கோரிக்கை களை கேட்டறிந்தார்.

இந்நிலையில் முதல்வர் குறவர் இன சிறுமி களுடன் கலந்துரையாடிய உரையாடல்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த இணையதள உரையாடல் இதோ: ஐயா, ரொம்ப சந்தோஷம்! நீங்க பேசும்போதே எங்களுக்கு சந்தோஷமா இருக்குங்கய்யா, நீங்க பேசியதை கேட்கும் போதே, அந்த சந்தோஷத்தில் ஒரு வாரத்துக்கு சாப்பிட வேண்டாம்ன்னு நினைக்கிறோம்!

நீங்கள் எங்கள் இடத்துக்கு வரப் போறீங்களா, இதை கேட்கும்போதே மிகுந்த சந்தோஷமா இருக்கய்யா. இந்த ஏரியாவை இதுவரைக்கும் யாருமே பார்த்ததும் இல்லை, இங்கே வந்ததும் இல்லை. நீங்க எங்கள் குறைகளை கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க, எங்கள் ஊருக்கு வாங்கய்யா? எங்கள் ஏரியாவை பாருங்கய்யா.

முதல்வர்: உங்கள் ஏரியாவுக்கு வந்தால் சாப்பாடு போடுவீங்களா?

சிறுமிகள்: வாங்கய்யா, கறி சோறுடன் விருந்தே வைக்கிறோம், எங்களுக்கு ஒரே கோரிக்கை, சாதிச்சான்றிதழ் கொடுக்க வேண்டும். இதனை நாங்கள் வாழ்நாளெல்லாம் - காலத்துக்கும் மறக்க மாட்டோம் என்றனர். முதல்வர் அவர்கள் அச்சிறுமிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கும்படி அமைச்சர் ஆவடி சா.மு.நாசரிடமும் கூறிட அவரும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பதாக கூறினார். அப்போது குறவர் இனச் சிறுமிகள் கைகளை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்

Also Read: “நீலகிரியில் காட்டுத் தீ.. 12 மணி நேரத்தில் 30 ஏக்கர் எரிந்து நாசம்” : இரவு பகலாக போராடும் வனத்துறையினர்!