Tamilnadu
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம்.. தேடிச் சென்ற பெற்றோருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி!
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு முகுந்தன், தர்னீஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இரண்டாவது மகன் தர்னீஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதனால் சிறுவனை அவரது பெற்றோர் வீட்டிற்கு வெளியே பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் அங்கும் சிறுவன் கிடைக்கவில்லை.
இதையடுத்து வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது சிறுவன் தர்னீஸ் அதில் விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு உடனே சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதைக்கேட்டு சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு கதறியழுதனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!