Tamilnadu
வேலுமணி வீட்டில் தொண்டர்களுக்கு காலாவதியான தண்ணீர் பாட்டில் கொடுத்த அதிமுக: ரெய்டு நேரத்திலும் இப்படியா?
தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.
இந்நிலையில் மீண்டும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியனர்.
மேலும் கணக்கில் வராத ரூ. 13 லட்சம், 2 கோடி வைப்புத்தொகை ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றை போலிஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக இன்று காலையிலிருந்தே எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாகச் சென்னையில் மட்டும் 8 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த காலத்தில் ரூ.58.23 கோடிக்கு அதிகமாகச் சொத்துக்களை சேர்த்திருப்பதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில்தான் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் தற்போது வரை சிக்கியுள்ள ஆவணங்கள் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், 27.04.2016 முதல் 15.03.2021 வரையுள்ள காலக்கட்டத்தில் மட்டும் வருமானத்தை விட அதிகமாக ரூ.58,23,97,052 சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக பதவிவகித்த காலத்தில், சுமார் ரூ.58.23 கோடி (அதாவது 3,928% வருமானத்தை விட அதிகமாக) சேர்த்திருப்பதாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.
இதனிடையே, எஸ்.பி வேலுமணி வீட்டில் குவிந்த தொண்டர்களுக்கு காலை இட்லி, வெண் பொங்கல், கிச்சடி, கேசரி, உப்புமா வடை, பிஸ்கட், டீ மற்றும் காபி அதிமுகவினர் வழங்கியிருக்கிறார்கள். இதுபோக எனர்ஜியாக இருப்பதற்காக அவ்வப்போது ரோஸ் மில்க்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே , அங்கு கூடியவர்களுக்கு காலாவதியான குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளதுதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!