Tamilnadu
‘ஆள் இல்லாத வீடுகள்தான் டார்கெட்; நோட்டமிட்டு சொல்லும் மனைவி’: கூட்டாளியுடன் துணிகர கொள்ளை- நடந்தது என்ன?
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனியில் உள்ள பாபாஜ் என்பவர் வீட்டில் கடந்த 3ம் தேதி மர்ம நபர்கள் இரண்டு பேர் நுழைந்து, பாபாஜை தாக்கி அங்கிருந்து தங்க செயின், மோதிரங்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பாபாஜ் கொளத்தூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அங்கிருந்த சிசிடிவியில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்த போது, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகியோர் என அடையாளம் கண்டு, இரண்டு பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த தங்க நகைகள், செல்போன், பைக் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்தன. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
விசாரணையில் பாலாஜியின் மனைவி திவ்யா என்பவர் ஆள் இல்லாமல் பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு தகவலை தனது கணவரிடம் கூறியுள்ளது. அதன்படி பாலாஜி தனது கூட்டாளி கார்த்தியுடன் சேர்ந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து மூன்று பேரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
135 கிலோ போதைப் பொருள் : அன்று தவெக அமைச்சரை விஜய் காப்பற்றியதன் விளைவு, இன்று.. - கனிமொழி MP தாக்கு!
-
மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி வலியுறுத்தல்!
-
“இணையத்தை குழந்தைகள் பயன்படுத்துவது அடிப்படை உரிமை” : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
கானா பாடலின் முகவரி.. பட்டி தொட்டி எங்கும் ஒலித்த தேவா ஹிட்ஸ்.. காற்றில் கலந்தார் ‘தேனிசைத் தென்றல்’!
-
“வெள்ளை மனம் கொண்ட தேவா.. கானா என்றாலே தேவா தான்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்!