Tamilnadu
மகளிர் தினத்தன்று கத்திமுனையில் துணை நடிகை பலாத்காரம்; நகை,பணத்தை பறித்து வீடியோ எடுத்து மிரட்டிய இருவர்!
சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் சினிமாவில் துணை நடிகையாக இருக்கும் 38 வயது பெண் விஜயலட்சுமி. கடந்த மார்ச் 8ம் தேதியன்று இரவு 10.30 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர் அப்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த மற்றொரு நபருடன் சேர்ந்து துணை நடிகையை மிரட்டி அவரிடம் இருந்த ஒன்றரை சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறித்துக்கொண்டு அந்த பெண்ணை பல கோணங்களில் வீடியோ எடுத்துவிட்டு, போலிஸிடம் தெரிவித்தால் இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என எச்சரித்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
இதனையடுத்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழு சம்பவ இடத்துக்குச் சென்று அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது, மதுரவாயலைச் சேர்ந்த செல்வக்குமார் (21), மற்றும் ராமாபுரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் (27) ஆகிய இருவரும் தான் துணை நடிகையை மிரட்டி பலாத்காரம் செய்து நகை பணத்தை பறித்துச் சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து உடனடியாக அந்த இருவரையும் கைது செய்த போலிஸார் அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் அரை சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!