Tamilnadu
பைக்கில் சென்றபோது பரிதாபமாக பலியான பேருந்து நடத்துனர்கள்; செங்கல்பட்டு அருகே லாரி மோதியதில் நடந்த கோரம்!
செங்கல்பட்டு அருகே ராட்டினம் கிணறு பகுதியிலிருந்து கல்பாக்கம் செல்லும் ரயில்வே மேம்பாலம் வளைவில் இருசக்கர வாகனத்தில் ஜோதி பிரகாஷ் மற்றும் நந்தகோபன் ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த டாரஸ் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதனால் நிலைதடுமாறி கீழே இருவரும் விழுந்ததில் லாரி சக்கரத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜோதி பிரகாஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் படுகாயமடைந்த நந்தகோபன் என்பவரை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயரிழந்தார்.
பின்னர் இருவரது உடலையும் கைப்பற்றி செங்கல்பட்டு நகர போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
விபத்தில் உயிரிழந்த நந்தகோபன், ஜோதி பிரகாஷ் ஆகிய இருவரும் சென்னை மத்திய மாநகரப் பேருந்து பணிமனையில் நடத்துனர்களக பணியாற்றி வருவதும் இவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வதும், இன்று சென்னைக்கு வேலைக்கு செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!