Tamilnadu
"போலிஸில் சிக்கக் கூடாது" .. சாமி கும்பிட்டுப் பணத்தைத் திருடிய நபர்: பெட்ரோல் பங்கில் நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் சாலையில், பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இதில் வேல்முருகன், கிருஷ்ணன் ஆகியோர் வேலைபார்த்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று நள்ளிரவு யாரும் பெட்ரோல் போட வராததால் சிறிது நேரம் தூங்கியுள்ளனர். பிறகு எழுந்து பார்த்தபோது பெட்ரோல் பங்கில் இருந்து ரூ.8 ஆயிரம் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு போலிஸார் வழக்குப் பதிவு செய்து பெட்ரோல் பங்கிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பெட்ரோல் பங்கில் இருக்கும் அறைக்குள் நுழைந்து, அங்கிருக்கும் சாமி படத்தின் முன்பு கை எடுத்துக் கும்பிட்டு விட்டு பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் பட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 6 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் ரமேஷ்குமார் மீது திருட்டு, வழிபறி உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!