Tamilnadu
“ஒரு நாள் போலிஸ் அதிகாரியாக பணியாற்றிய NCC மாணவி” : புதுச்சேரி காவல்துறை அசத்தல் - குவியும் பாராட்டு!
உலக மகளிர் தினத்தையொட்டி ஒரு நாள் முதல்வர் போன்று, புதுச்சேரி அரசு கல்லூரி மாணவி ஒரு நாள் போலிஸ் அதிகாரியாக பணியாற்றினார். உலக மகளிர் தினத்தையொட்டி புதுச்சேரி காவல்துறை, பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவி நிவேதாவை இன்று "ஒரு நாள் முத்தியால்பேட்டை காவல்நிலைய அதிகாரியாக" நியமித்து கவுரவித்தது.
என்.சி.சி மாணவியான நிவேதா, என்.சி.சி உடையில் முத்தியால்பேட்டை காவல்நிலையம் வந்தார். அப்போது காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் ஆகியோர் பூங்கொத்து வரவேற்று, நிலைய அதிகாரி இருக்கையில் அமர வைத்தனர். பின்பு நிவேதா காவலர்களின் பணிகளை தெரிந்து கொண்டார்.
தொடர்ந்து, காவல்நிலையத்தில் உள்ள அறைகளை பார்வையிட்ட அவர், காவல்நிலைய ஆவணங்களை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து காவல்துறை வாகனத்தில் ஏறிச்சென்று முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். மேலும் பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுத்தார். ஒரு நாள் போலிஸ் அதிகாரியாக பணியாற்றிய நிவேதாவுக்கு சக நண்பர்கள், மகளிர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!