Tamilnadu
”தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மு.க.ஸ்டாலின்தான்” - புகழ்ந்து தள்ளிய EVKS இளங்கோவன்!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈ.வி.கே.சம்பத்தின் 97வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை, இந்திய அரசியலின் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டியது. பல அரசியல் கட்சிகள், பல்வேறு அரசியல் கூட்டணிகளை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கி மிகப்பெரிய கொள்கை கூட்டணியாக ஏற்படுத்தி உள்ளார். இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல, தமிழக மக்களை மட்டுமல்ல இந்திய மக்களையும் காப்பாற்றுவதற்கான கூட்டணி.
அரசியலில் கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதில் முன்னணியில் இருக்கிறார். அவரது நடவடிக்கையின் மூலம் அவரது பெருமையும், அவரின் பெயரை மிகப்பெரிய அளவில் உயர்த்துகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஒருநாள் கூட ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்.
தமிழகத்தில், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு பிறகு தமிழகத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தற்போது இந்த அரசியல் நடவடிக்கை மூலம் மு.க.ஸ்டாலின் இமாலய அளவுக்கு உயர்ந்து இருக்கிறது.
மு.க.ஸ்டாலின் இந்த நடவடிக்கை தனது கட்சி கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்பதை இது தெளிவாக காட்டுகிறது. மு.க.ஸ்டாலின் மீது நான் அன்பு வைத்திருக்கேன். தற்போது அதனையும் தாண்டி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். மு.க.ஸ்டாலினை உளமார வாழ்த்துகிறேன்.
தி.மு.கவில் இளைஞர்கள், பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அவர்களது செயல்பாட்டிலும் எந்த தவறும் நடக்க கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பார். எந்த தவறும் நடக்காது என்ற நம்பிக்கையும் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!