Tamilnadu
“முதலில் லாபம்.. அடுத்து தொட்டதெல்லாம் நஷ்டம்” : பங்குச் சந்தை நஷ்டத்தால் விபரீத முடிவெடுத்த தம்பதி!
மதுரையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி லாவண்யா. நிதி ஆலோசகரான நாகராஜன் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். முதலில் இவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து பல லட்சங்களை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். பின்னர் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.
இருப்பினும் பங்குச் சந்தையில் இவருக்கு லாபம் கிடைக்கவில்லை. மேலும் மேலும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவரது தொழிலிலும் நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த தம்பதியர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்த் தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !