Tamilnadu
“உக்ரைனில் சிக்கியுள்ள மகனை நினைத்து உயிரைவிட்ட தாய்”: வீடியோ காலில் இறுதி அஞ்சலி; ஆம்பூரில் நடந்த சோகம்!
ஆம்பூர் அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சக்திவேல் உக்ரைன் முஜைல் பகுதியில் உள்ள கல்லூரியில் மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், இவரது பெற்றோர் சங்கர் மற்றும் சசிகலா தங்கள் கிராமத்தில் விவசாயம் வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், உக்ரைனில் நடைப்பெற்று வரும் போர் பகுதியில், சிக்கியுள்ள தனது மகனை நினைத்து சசிகலா பெரும் துயரில் ஆழ்ந்த நிலையில், எதிர்பாரா விதமாக மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தாயின் இறுதி சடங்குகளை இளைய மகன் செய்ய வேண்டிய நிலையில், சக்திவேல் நாடு திரும்ப முடியாமல் வீடியோ காலில் தாயின் உடலை பார்த்து கதறி அழுத நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு சக்திவேல் மற்றும் அவருடன் இருக்கும் மாணவர்களை உடனடியாக அழைத்து வர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!