Tamilnadu
குடிபோதையில் தகராறு.. சமையல் கத்தியால் சித்தப்பாவை சரமாரியாக குத்தி கொலை செய்த மகன் - ‘பகீர்’ சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூர், போளூர் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் குமார் (60). இவர் செங்கல்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் தங்கி மேஸ்தரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சார்ந்த அவரது அண்ணன் மகன் ராமதாஸ் என்பவர் குடிபோதையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இறந்த குமாரும் அவரது அண்ணண் மகன் ராமதாஸ் வெங்கடேஸ்வர நகரில் தங்கி மேஸ்திரி வேலை செய்து வந்திருந்த நிலையில், தங்கியிருந்த இடத்தில் இருவரும் சேர்ந்து குடித்துவிட்டு குடிபோதையில் ஏற்பட்ட வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
ராமதாஸ் அவருடைய சித்தப்பா குமாரை வயிறு மற்றும் கை பகுதியில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, கொலையாளி ராமதாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!