Tamilnadu
கடலில் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்த அண்ணன், தம்பிக்கு நேர்ந்த சோகம்: நடந்தது என்ன?
சென்னை திருநின்றவூர் சுரேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆகாஷ் மற்றும் ஹரிஸ். அண்ணன், தம்பிகளான இருவரும் நேற்று மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர்.
பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து கடற்கரையில் விளையாடிவிட்டு கடலில் குளித்துள்ளனர். அப்போது கடலில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் ஆகாஷ் மற்றும் ஹரிஸ் சிக்கியுள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இருவரையும் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் ராட்சத அலை அவர்களைக் கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. பின்னர் கடற்கரையில் ரோந்து பணியில் இருந்து போலிஸாரிடம் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடம் போலிஸார் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சகோதரர்களைச் சடலமாகவே மீட்கமுடிந்தது. இதையடுத்து இருவரது உடலும் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கடல் அலையில் சிக்கி அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நாளுக்கு நாள் அதிரித்து வரும் தூய சக்தியின் துர்நாற்றம்” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!