Tamilnadu
இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து Instagram-ல் பதிவேற்றம்.. வாலிபரை தூக்கிய போலிஸ்!
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது சில புகைப்படங்களை மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த அந்தப் பெண்ணின் நண்பர்கள் இதுகுறித்து அவருக்குத் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணும் புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் புகைப்படம் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் கொண்டு மர்ம நபரை தேடிவந்தனர்.
இதையடுத்து முனீஸ்வரன் என்ற வாலிபர்தான் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!