Tamilnadu
மனைவி போனை எடுக்காததால் மகனை கொடூரமாக தாக்கிய தந்தை : பதறவைக்கும் வீடியோ - ‘காப்பு’ மாட்டிய காவல்துறை!
கோவை மாவட்டம் மதுக்கரை அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாதிக்பாஷா - ரெஜினா பானு தம்பதி. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மூத்த மகன் அம்மாவுடன் வசித்து வரும் நிலையில், இளைய மகன் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே பெற்ற மகனை தந்தை சாதிக் பாஷா கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தந்தை சாதிக் பாஷாவை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய நிலையில், ஆனால் அவர் செல்போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் இளைய மகனை மட்டும் ரெஜினா சந்தித்ததால், ஆத்திரத்தில் மது போதையில் சொந்த மகனை தாக்கியதாக போலிஸார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் மதுபோதையில் தனது மகனை, அவரது தந்தை அடித்ததாக அப்பகுதி மக்கள் போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலிஸார் அவரை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!