Tamilnadu

“வட்டிக்கு கடன் வாங்கி செலவு செஞ்சேன்.. 44 ஓட்டுதான்” : விரக்தியில் வேட்பாளர் எடுத்த விபரீத முடிவு!

திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த மணி என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் பெரும்பாலான இடங்களில் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திருப்பூர் மாநகராட்சியில் 36வது வார்டில் போட்டியிட்டவர் மணி. இவர் தேர்தல் செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது, வெறும் 44 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டையும் இழந்துவிட்டதால் மணி கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மணி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தேர்தல் செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில், 44 வாக்குகள் மட்டுமே பெற்று அவர் தோல்வியடைந்ததால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read: “எல்லாம் போச்சே..” மண்ணைக் கவ்விய அ.தி.மு.க : எங்கும் தோல்வி.. சோகத்தில் அழுத அ.தி.மு.க நிர்வாகி!