Tamilnadu
“திரையரங்கம் சூறையாடல்.. பெட்ரோல் குண்டு வீச்சு”: அஜித் ரசிகர்களின் சேட்டையால் முகம் சுளித்த பொதுமக்கள்!
அஜித்தின் நேர்கொண்ட பார்வை தொடங்கி வலிமை படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப்படம், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
சுமார் 3 வருடங்களுக்கு பிறகு படம் இன்று வெளியாகியுள்ளதால் பல இடங்களில் அஜித் குமார் ரசிகர்கள், தங்களால் முடிந்த உதவிகளை அங்கேங்கே செய்து வருகின்றனர். குறிப்பாக சிதம்பரத்தில், நடிகர் அஜித் கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்மால் இலவசமாக பால் வழங்கி தங்களது உற்சாகத்தினை வெளிப்படுத்தினர். ஏழை எளிய குழந்தைகளுக்கு 25 லிட்டர் வரை பால் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பல இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் அஜித் குமார் ரசிகர்கள் நடந்ததுக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கே.எஸ் திரையங்கில் வலிமை படத்தின் முதல் காட்சி திரையிட தாமதமானதால், கோபமடைந்த ரசிகர்கள் தியேட்டர் கதவில் நாட்டு வெடியை கட்டி வெடிக்க முயற்சித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அதனை அகற்றவந்த ரசிகர்கள் மற்றும் சில போலிஸாரை சில ரசிகர்கள் தள்ளியதால் பரபரப்பு ஏற்படுள்ளது.
அதேபோல், கோவையில், காங்கா திரையரங்கம் முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
Also Read
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!