Tamilnadu
ஒரு ஓட்டு கூட பெறாத அ.தி.மு.க வேட்பாளர்.. மோசமான சாதனையில் பா.ஜ.கவோடு போட்டி போடும் அ.தி.மு.க!
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் முகமது இப்ராம்சா 1 வாக்கு கூட பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பா.ஜ.க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் நகப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லாமல் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், பா.ஜ.க வேட்பாளர்கள் படுதோல்வியைச் சந்தித்து வருகின்றனர்.
பவானிசாகர் 11வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.கவின் நரேந்திரன் என்பவர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் அனந்தபுரம் பேரூராட்சி 6வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் நிரோஷா ஒரு வாக்கு கூட பெறாமல் படுதோல்வியைத் தழுவினார்.
இதேபோல, அ.தி.மு.க வேட்பாளரும் ஒரு வாக்கு கூட பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் முகமது இப்ராம்சா 1 வாக்கு கூட பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பேரூராட்சி 7 வது வார்டில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், 179 வாக்குகளை பெற்ற சுயேட்சை வேட்பாளர் பிருத்திவிராஜா வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் பரூக் 149 வாக்குகள் பெற்றார்.
அ.தி.மு.க வேட்பாளர் முகமது இப்ராம்சாவின் சகோதரர் அ.தி.மு.கவில் கரம்பக்குடி நகர செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது இருவருமே வாக்கு செலுத்திய நிலையில், தற்போது அ.தி.மு.க வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறாதது அக்கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !