Tamilnadu
சென்னை உட்பட 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு என அறிவிப்பு: எங்கெங்கு தெரியுமா? விவரம் இதோ!
தமிழ்நாடு முழுவதும் நேற்று 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு நேற்று காலை தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அறிக்கையில், சென்னையில் 2, மதுரையில் 1, அரியலூரில் 2, திருவண்ணாமலையில் 2 என 7 வாக்குச்சாவடிகளில் நாளை (21.02.2022) மறுவாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறுவாக்குப்பதிவின் கடைசி ஒரு மணி நேரம், அதாவது, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை பதிவு செய்யப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!