Tamilnadu
“ரவுடி பேபி சூர்யா மீது பாய்ந்தது குண்டாஸ்.. சிக்காவும் கூண்டோடு கைது” - போலிஸ் அதிரடி : என்ன காரணம்?
டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. மதுரையைச் சேர்ந்த இவர் முதலில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வந்தார். பின்னர், ஆபாசமாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரை ஆபாசமாகத் திட்டி சூர்யாவும் அவரது ஆண் நண்பர் சிக்காந்தர்ஷாவும் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
இந்த வீடியோவைப் பார்த்த பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து கோவை மாட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷாவை கடந்த மாதம் 4ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் சுப்புலட்சுமி என்ற சூர்யாவையும் சிக்கந்தர்ஷாவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
Also Read
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !
-
"ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை சரியானது அல்ல" - உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா !
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?