Tamilnadu
உஷார்... QR Code-ல் வேலையை காட்டும் நூதன திருடர்கள்.. திருப்பூர், கோவை பகுதிகளில் அட்டகாசம்!
கடைகளில் பணப் பரிவர்த்தனைக்காக ஒட்டப்படும் QR Code ஸ்டிக்கர் மீது மர்ம நபர்கள் நள்ளிரவில், போலியான ஸ்டிக்கர் ஒட்டி நுாதன முறையில் திருடுவதாக புகார்கள் குவிந்துள்ளன.
தினசரி லட்சக்கணக்கில் வணிகம் நடக்கும் வணிக வளாகங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை QR Code மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெறுகின்றனர். இந்த 'QR Code' என்பது வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை உடனடியாக செலுத்துவதற்கான வசதியாகும்.
கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்து நமது ஸ்மார்ட் போன்களின் பேமெண்ட் செயலிகளின் மூலமாக மிக எளிதாக உடனடியாக பணம் செலுத்தலாம். தற்போது பெரும்பாலான இடங்களில் இத்தகைய டிஜிட்டல் பேமெண்ட் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் கடைகளில் பணப் பரிவர்த்தனைக்காக ஒட்டப்படும் QR Code ஸ்டிக்கர் மீது மர்ம நபர்கள் நள்ளிரவில், போலியான ஸ்டிக்கர் ஒட்டி நுாதன முறையில் திருடுவதாக போலிஸாருக்கு புகார்கள் குவிந்துள்ளன.
திருப்பூரை அடுத்த முதலிபாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, ஹோட்டல் மற்றும் ஃபாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இவரது கடைக்கு சாப்பிட சென்ற ஒருவர், சாப்பிட்டு விட்டு, அங்கு ஒட்டியிருந்த, QR கோடை ஸ்கேன் செய்து, பணத்தை அனுப்பினார்.
ஆனால், துரைசாமியின் வங்கி கணக்குக்கு பணம் செல்லவில்லை. இதனால் மீண்டும் ஒரு முறை 'ஸ்கேன்' செய்தபோது, QR கோடில், ஹோட்டல் பெயர் இல்லாமல், வேறு பெயர் வந்துள்ளது. இதனை துரைசாமியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து கடையில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை சோதித்துப் பார்த்ததில், QR ஸ்டிக்கரின் மேல், வேறு ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்ததில், நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்தபடி வரும் ஒருவர், 'ஸ்டிக்கர்' மீது, QR Code மட்டும் வெட்டி ஒட்டிவிட்டுச் செல்வது தெரிந்தது.
இதேபோன்று அருகே உள்ள மற்றொரு ஹோட்டல், மளிகை கடை என பெரும்பாலான கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் போலிஸில் புகார் அளித்துள்ளனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!