Tamilnadu
மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த மருத்துவக் கல்வி இயக்குநரகம்!
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் முன்னாள் தலைவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவருமான டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் மருத்துவர் சுப்பையா வசிக்கும் குடியிருப்பில் 62 வயது பெண்மணியுடன் தகராறு செய்தது குறித்த அப்பெண்மணி புகார் தெரிவித்த நிலையில், அப்பெண்மணியின் வீட்டின் முன்பாக சுப்பையா குப்பைகளைக் கொட்டி சிறுநீர் கழிக்கும் சிசிவிடி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏ.பி.வி.பி தேசிய செயலர் நிதி திரிபாதியை மருத்துவக் சுப்பையா சிறையில் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசு ஊழியருக்கான நடத்தை விதியை மீறிய புகாரில் மருத்துவர் கல்வி இயக்குநரகம் மருத்துவர் சுப்பையா மீது நடவடிக்கை எடுத்துள்ளது. துறை ரீதியான விசாரணை நடைபெறும் வரை பணியிடை நீக்கம் தொடரும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!