Tamilnadu
FaceBook-கில் வெளியான புகைப்படம்.. அதிர்ச்சியில் மாணவி எடுத்த விபரீத முடிவு: நடந்தது என்ன?
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் லோகேஷ் என்பவருடன் பழகிவந்துள்ளார். இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துக் கண்டித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியின் அந்தரங்க படத்தை லோகேஷ் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து அந்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் மாணவி சில நாட்களான மனமுடைந்து சோகமாக இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்துத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலிஸார் மாணவி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பேஸ்புக்கில் புகைப்படம் வெளியானதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!