Tamilnadu
”இனி எல்லா ரேஷன் கடைகளிலும் இவை கட்டாயம்” - இல்லத்தரசிகளின் சிரமத்தை போக்கிய தமிழ்நாடு அரசு!
நியாயவிலைக் கடைகளில் பராமரிக்க வேண்டிய அறிவிப்பு பலகைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
வேலை நேரம், இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விவரம், விநியோகம் செய்யப்பட்ட விவரம், விற்பனை விலை உள்ளிட்டவை தகவல் பலகையில் இடம்பெற வேண்டும்.
விநியோகம் செய்யப்பட்டது, இறுதி இருப்பு உள்ளிட்ட விவரங்கள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படும் அளவு மற்றும் விற்பனை விலை ஆகியவை அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும்.
நியாயவிலைக்கடை தொடர்பாக புகார் அளிக்க உணவுத்துறை அமைச்சர் 044 25671427, உணவுத்துறை செயலாளர் 044 25672224, உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் 044 28592255 உள்ளிட்டோரின் எண்கள் இடம்பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!