Tamilnadu
தோல்வி பயத்தில் திமுக வேட்பாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி.. செங்கல்பட்டில் அராஜகம்!
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 27 வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் முனுசாமி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க நகர செயலாளர் செந்தில்குமார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தி.மு.கவினர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சியின் 27 வார்டில் தி.மு.க சார்பில் முனுசாமி போட்டியிடுகின்றார். இன்று காலை குண்டூர் மேட்டுத் தெரு பகுதியில் இவரும், தி.மு.க நிர்வாகியான ஆரோக்கியசாமி ஆகியோரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த அ.தி.மு.க நகரச்செயலாளரும், அ.தி.மு.க 27 வார்டு வேட்பாளரின் கணவருமான செந்தில்குமார் மற்றும் அவருடன் வந்த நபர்கள் முனுசாமியை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க வேட்பாளர் முனுசாமி மற்றும் தி.மு.க நிர்வாகிகள் ஆகியோர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் எனவும் தன்னை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க நகர செயலாளர் செந்தில்குமார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
தோல்வி பயத்தில் தி.மு.க வேட்பாளரை அ.தி.மு.க நகர செயலாளர் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!
-
“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!