Tamilnadu
கூலித் தொழிலாளியின் மனைவியுடன் தகாத உறவு.. அ.தி.மு.க Ex-MLA மீது வழக்குப்பதிவு : பின்னணி என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் குமார். கூலித் தொழிலாளியான குமாருக்கு விஜயஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 வயது குழந்தை உள்ளது. வெளியூரில் வேலைக்காகச் சென்றுவிட்டு நேற்றைய தினம் இரவு வீடு திரும்பிள்ளார் குமார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு, முன்பக்கத்தில் கார் ஒன்றும் நின்றிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த குமார், வீட்டின் ஜன்னலை உடைத்து பார்க்கும்போது தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் தனிமையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குமார் சத்தம்போட்டு கூட்டலிட்டுள்ளார். அப்போது வெளியே வந்த நபர் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் என்பது தெரியவந்தது. நாஞ்சில் முருகேசனும், அவரின் வாகன ஓட்டுநரும் சேர்ந்து குமாரை கடுமையான வார்த்தைகளால் திட்டி, கொலை மிட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் நாஞ்சில் முருகேசனின் டிரைவர் மகேஷ் தாக்கியதில் குமாருக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாஞ்சில் முருகேசன் மீதும் டிரைவர் மீது அவர் புகார் கொடுத்துள்ளார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாஞ்சில் முருகேசன் தலைமறைவான நிலையில் அவரை போலிஸார் தேடி வருகின்றனர்.முன்னதாக நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!