Tamilnadu
“அத்தையை கொன்று புதைத்த மருமகன்.. போலிஸிடம் காட்டிக் கொடுத்த செல்போன் சிக்னல்” : விசாரணையில் பகீர் தகவல்!
தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட சூரப்பளம் ஏரிப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அங்கு சென்று அந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் சடலமாக இருந்தது யார் என்பது குறித்து நடத்திய விசாரணையில் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி என்பது தெரியவந்தது. இதையடுத்து இவரது மர்ம மரணம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அன்னபூரணி புதைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே இருந்த செல்போன் சிக்கல்களை போலிஸார் ஆய்வு செய்தனர். அப்போது அவரது மருமகன் முருகானந்தம் என்பவரின் செல்போன் எண்ணும் போலிஸாருக்கு காட்டியுள்ளது.
இதனால் போலிஸார் அவரிடம் விசாரணை செய்தபோது, ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துக்காக அத்தையை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்துக்காக சொந்த அத்தையையே மருமகன் கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!