Tamilnadu
மலேசியா சட்டப்பேரவை உறுப்பினருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி டார்ச்சர்: புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் மீது புகார்!
மலேசியா சட்டப்பேரவை உறுப்பினருக்கு ஃபேஸ்புக்கில் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிவந்த புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் குறித்து துணைநிலை ஆளுநருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
மலேசியா நாட்டின் பகாங் மாநிலம் சபாய் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் தமிழச்சி காமாட்சி துரைராஜூ. மலேசிய வாழ் தமிழரான இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி உள்ளார்.
அந்த நபர் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் சட்டப்பேரவை பெண் உறுப்பினருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி வந்ததோடு, ஆபாச பதிவுகளையும் பகிர்ந்து வந்துள்ளார். மேலும் மெசெஞ்சர் மூலம் அழைத்து தொல்லை கொடுத்துள்ளார்.
இதை கவனித்த சட்டப்பேரவை உறுப்பினரின் உதவியாளர், கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபரை ஃபேஸ்புக் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர்.
அதற்கு அந்த நபர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராஜூவின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பகிர்வேன் என்று மிரட்டியுள்ளார். அந்த மர்ம நபர் தொடர்பாக ஆராய்ந்ததில், அவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்றும், பா.ஜ.கவைச் சார்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தமிழச்சி காமாட்சி துரைராஜூ, இதுதொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு, மர்ம நபர் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவுகளுடன் ஆடியோ பதிவு மூலம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த ஆடியோவில், “மலேசியா நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள தமிழ்ப்பெண்ணான எனக்கே இதுபோன்ற நிலை என்றால், அவரது ஊரில் என்ன செய்வார் என்பதை யோசித்து பார்க்கவே முடியவில்லை. இதனை வளரவிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!