Tamilnadu
டீ கடை வைக்க கொள்ளையர்களாக மாறிய பொறியாளர்கள்: விசாரணையில் போலிஸ் அதிர்ச்சி!
நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட வெப்படை, பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் தனியாகச் செல்லும் பெண்களிடம் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருவதாக போலிஸாருக்கு புகார்கள் வந்துள்ளது.இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் போலிஸார் பள்ளிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து போலிஸார் விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
இதில், தனியாக செல்லும் பெண்களிடம் கொள்ளையடித்து வந்தது ராஜூ, அருண் என்ற வாலிபர்கள்தான் என்பது தெரியவந்தது. மேலும் பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் பெரிய அளவில் டீ கடை வைக்க வேண்டும் என்பதற்காகவே நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக போலிஸார் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளைக் கைது செய்த போலிஸாருக்கு பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!
-
கடுமையான தலைவலி இருக்கிறதா?... டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன? - நிபுணர்கள் சொல்லும் தகவல் !
-
“ஹே நாங்க போலீஸ்..” கோயிலுக்கு சென்ற சிறுமி.. துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - ஷாக்!
-
வந்தே மாதரம் சட்டத்திற்கு எதிரான வழக்கு : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
“ஜெம் வீரமணிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை... நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக அரசு”: ரகுபதி பதிலடி!