Tamilnadu

2 வயது குழந்தையின் வாயில் குத்திய 59 செ.மீ கம்பி.. 45 நிமிடத்தில் அகற்றிய அரசு மருத்துவமனை: நடந்தது என்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் குழந்தையேசு. இவரது மனைவி செலின். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆல்வின் ஆண்டோ ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் குழந்தையேசுவின் வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் சிறுவன் கடந்த 7ம் தேதி விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தொட்டியில் விழுந்துள்ளான்.

இதில், தொட்டியில் இருந்த கான்கிரீட் கம்பி குழந்தையின் வாய் வழியாக குத்தி முதுகு புறமாக வெளியே வந்துள்ளது. இதைப்பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கம்மியோடு சேர்த்து குழந்தையைச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தையின் வாயில் சிக்கியிருந்த 59 செ.மீட்டர் நீளமுடைய கம்பியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். தற்போது குழந்தை மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வருகிறது.

Also Read: 11 வது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.. எழும்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!